Saturday, July 28, 2012

Bhagavath Vishaya Thaniyans

பகவத் விஷயம் (ஈடு) காலக்ஷேபம் சாதிப்பதற்கு முன்னால் க்ரமமாக அநுஷ்டிக்கப்படும் தனியன்களின் தொகுப்பு


(திருமலையாழ்வார் அருளிச் செய்தது)
நாத2ம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ்தவ்ய மாலாத
4ராந்
யோகீ3ந்த்3ரம் குருகேசந்த்ர ஜலதி4ம் கோ3விந்த3 கூராதி4பௌ
4ட்டார்யம் நிக3மாந்தயோகி3 ஜக3தா3சார்யௌ ஸக்ருஷ்ணத்3வயௌ
வந்தே3 மாத
4வ பத்3மநாப4 ஸுமந: கோலே தே3வாதி4பாந்

(மணவாள மாமுநிகள் அருளிச் செய்தது)
திருவருண்மால் சேனைமுதலி சடகோபன் நாதமுனி சீர்
உய்யக்கொண்டார் மணக்கால்நம்பி சென்றாம் ஆளவந்தார்
குருமாலாதரர் குறுகைப்பிராற்கு அன்பாம் எதிராசர்
கோவிந்தர் கூரேசபட்டர் வேதாந்திமுநி
இருகண்ணர்க்கு அன்புடைய நம்பிள்ளை 

இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பனாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டருளும்
திருமலையாழ்வார் பதங்கள் முன்பென்னுள் சேர்ந்தனவே

(திருக்குருகைப் பிரான் பிள்ளான் தனியன்)
த்3ராவிடா33ம ஸாரஜ்ஞம் ராமாநுஜபதா3ச்ரிதம் |
ருசிரம் (சர்வஜ்ஞம்) குருகேசார்யம் நமாமி சிரஸாந்வஹம்
||

தமிழ் வேதமான திருவாய்மொழியின் சாரார்த்தத்தை அறிந்தவராய், எம்பெருமானாருடைய திருவடிகளை ஆஷ்ரயித்தவராய், அழகியவரான (அல்லது எல்லாம் அறிந்தவரான) திருக்குருகைப் பிரான் பிள்ளானை தினந்தோறும் தலையால் வணங்குகிறேன்.    

(நஞ்சீயர் தனியன்)
நமோ வேதா3ந்த வேத்3யாய ஜக3ந்மங்க3ளஹேதவே |
யஸ்ய வாக
3ம்ருதாஸார பூரிதம் பு4வனத்ரயம் ||

யாவருடைய ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானமாகிற அம்ருத பிரவாஹத்தாலே லோகமெல்லாம் பரிபூர்ணமாயிற்றதோ, ஜகத்துக்கு மங்களாவஹராய் கொண்டிருக்கிற அந்த வேதாந்தி நஞ்ஜீயரை நமஸ்கரிக்கிறேன்.


(நம்பிள்ளை தனியன்)
வேதா3ந்த வேத்3யாம்ருத வாரிராஷோ வேதா3ர்த்த2 ஸாராம்ருத பூரமக3ர்யம் |
ஆதா
3ய வாஷந்தமஹம் ப்ரபத்3யே காருண்யபூர்ணம் கலிவைரிதா3ஸம் ||

வேதாந்தி நஞ்சீயராகிற அம்ருதமான சமுத்ரத்தில் நின்று, வேதத்தினுடைய ஸாரார்த்தமான திருவாய்மொழியின் அம்ருதத்தை வாங்கிக்கொண்டு, லோகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உஜ்ஜீவிக்கும்படியாக வர்ஷியாநிற்கிற, க்ருபாபூர்ணரான, திருக்கலிகன்றி தாசர் என்கிற தாஸ்ய நாமம் உடையவரான நம்பிள்ளையை பற்றுகிறேன்.


(பெரியவாச்சான் பிள்ளை தனியன்)
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத்கடாக்ஷண லக்ஷ்யாணாம் ஸுலப
4ஸ் ஸ்ரீத4ரஸ்ஸதா3 ||

யாவருடைய கடாக்ஷத்திற்கு விஷயபூதரானவர்களுக்கு ஸ்ரீய:பதியான சர்வேஸ்வரன் சர்வகாலமும் ஸுலபனாயிருக்கிறானோ, அந்த யாமுநருடைய குமாரரம், கிருஷ்ணன் என்ற திருநாமத்தை உடையவருமான  பெரியவாச்சான்பிள்ளையை நான் நமஸ்கரிக்கிறேன்.


(வடக்குத் திருவீதிப்பிள்ளை தனியன்)
ஸ்ரீக்ருஷ்ணபாத3பாதா3ப்3ஜே நமாமி  சிரசா ஸதா3 |
யத்ப்ரஸாத
3 ப்ரபா4வேந ஸர்வஸித்3தி4ர பூ4ந்மம் ||

யாவருடைய ப்ரசாத அதிசயத்தினாலே எனக்கு ஸமஸ்த புருஷார்த்த சித்தி உண்டாயிற்றோ, அப்படிப்பட்ட வடக்குத் திருவீதிப்பிள்ளையின் திருவடிகளை ஸர்வகாலமும்   தலையால் சேவித்து நிற்கிறேன்.

(பிள்ளை லோகாசார்யர் தனியன்)
லோகாசார்யாய கு
3ரவே க்ருஷ்ணபாத3ஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போ
4கி3 ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ||

ஸம்ஸாரமாகிற ஸர்பத்தாலே கடிபட்டு இருக்கிற சேதனரை உஜ்ஜீவிப்பிக்கிறவரும், வடக்குத் திருவீதிப்பிள்ளையின் குமாரருமான லோகாசார்யரை நான் நமஸ்கரிக்கிறேன்.

(நாயனாராச்சான் பிள்ளை தனியன்)
ஸ்ருத்யர்த்த
2 ஸாரஜநகம் ஸ்ம்ரிதிபா3லமித்ரம் பத3மோல்லஸத343வதங்க்ரி  புராண பந்து4ம் |
ஜ்ஞாநாதி4ராஜம் அப4யப்ரத3ராஜபுத்ரம் அஸ்மத்3கு3ரும் பரமகாருணிகம் நமாமி ||

ச்ருதி, ஸ்ம்ரிதி, இதிஹாசங்களுக்கு ஸாரார்த்த ப்ரதிபாதகராய், ஸ்ம்ரிதிக்கு  பாலமித்ரராய், விகஸத்பத்மஸத்ருச் பகவச்சரணங்களுக்கு புராதன பந்துவாய், ஜ்ஞானஸாம்ராஜ்ய  ஸம்ருத்தராய், பெரியவாச்சான்பிள்ளை குமாரராய், பரமகாருணிகராய், அஸ்மத் குருவுமான நாயனாராச்சான்பிள்ளையை சேவிக்கிறேன்.


(அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தனியன்)
த்
3ராவிடா3ம்நாய ஹ்ருத3யம் கு3ருபர்வ க்ரமாக3தம் |
ரம்யஜாமாத்ரு தே
3வேந த3ர்ஷிதம் கிருஷ்ணஸூநுநா ||

வடக்குத்திருவீதிப்பிள்ளையின் திருக்குமாரரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனாராலே ஆசார்ய  பரம்பரா ப்ராப்தமான ஆசார்ய ஹ்ருதயமானது சாக்ஷாத்கரிக்கப்பட்டது.

(வாதிகேசரி அழகிய மணவாள சீயர் தனியன்)
ஸுந்த
3ர ஜாமாத்ரு முநே ப்ரபத்3யே சரணாம்பு4ஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்
3ந ஜந்து ஸந்தார போதகம் ||

ஸம்ஸாரமாகிற சமுத்ரத்திலே அழுந்தாநிற்கிற சேதனரை அக்கரைப்படுத்துகிற ஓடமாய் கொண்டிருக்கிற, வாதிகேசரி அழகியமனவாளச் சீயருடைய திருவடிகளைப் பற்றுகிறேன்.


(நாலூராச்சான் பிள்ளை தனியன்)
நமோஸ்து தே
3வராஜாய சதுர் க்3ராம நிவாஸிநே |
ராமாநுஜார்ய தா
3ஸஸ்ய ஸுதாய கு3ணஷாலிநே ||

"ஸ்ரீராமானுஜ தாசர்" என்கிற நாலூர்பிள்ளையுடைய குமாரரும், சமதமாதி குணங்களாலே விளங்காநிற்கிறவராய்க் கொண்டிருக்கிற நாலூர் தேவராஜர் என்கிற ஆச்சான்பிள்ளையை நமஸ்கரிக்கிறேன்.  

 (திருவாய்மொழிப்பிள்ளை தனியன்)
நம: ஸ்ரீசைலநாதா2ய குந்தி நக3ர ஜந்மநே |
ப்ராஸாத3 லப்34 பரம ப்ராப்ய கைங்கர்ய ஷாலிநே ||

குந்தி நகரத்திலே திருவவதரித்து அருளினவராய், ‘திருமலையாழ்வார்என்கிற திருநாமத்தை உடையவராய், ஆழ்வார் திருநகரியாகிய திருக்குருகூரை காடுவெட்டி நாடாக்கி, ஊரிலே குடியேறி, ஆழ்வாரையும் எழுந்தருளப்பண்ணி, சகலவிதமான கைங்கர்யங்களையும் பண்ணுகையாலே விளங்காநிற்பவறான திருவாய்மொழிப்பிள்ளையை நான் நமஸ்கரிக்கிறேன்.

(மணவாள மாமுநிகள் தனியன்)
ஸ்ரீசைலே3யாபாத்ரம் தீ34க்த்யாதி3 கு3ணார்ணவம் |
யதீந்தி3ர ப்ரவணம் வந்தே3 ரம்யஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீசைலர் ஆகிய திருவாய்மொழிப்பிள்ளையின் க்ருபைக்கு விஷயபூதராய், ஜ்ஞான, பக்தி, வைராக்ய மஹோததியாய், ஸ்ரீபாஷ்யகாரர் விஷயத்தில் ப்ராவண்யத்தை உடையவராய்க் கொண்டிருக்கிற கோவில் அழகியமணவாளச் சீயரை சேவிக்கிறேன்.
 

(திருவாய்மொழி தனியன்கள்)

நாதமுனிகள் அருளிச் செய்தது
4க்தாம்ருதம் விஸ்வ ஜநாநுமோத3நம்
ஸர்வார்த்23ம் ஸ்ரீசட2கோப வாங்மயம்
ஸஹஸ்ர ஷாகோ2 பநிஷத் ஸமாக3மம்
நமாம்யஹம் த்3ராவிட3 வேத3ஸாக3ரம்

ஈஸ்வரமுநிகள் அருளிச்செய்தது
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து.

சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.

அனந்தாழ்வான் அருளிச்செய்தது
ஏய்ந்தபெருங் கீர்த்தி யிராமானுச முநிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்த
பெருஞ் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
 பேராத வுள்ளம் பெற.

பட்டர் அருளிச்செய்தது
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்,
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதற்றாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தா யிராமானுசன்

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
         யாழினிசை வேதத்தியல்

No comments:

Post a Comment